1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir said that kohli will not be compare with sachin

சாதனைகளில் சச்சினோடு கோலியை ஒப்பிட முடியாது… கவுதம் கம்பீர் சொல்லும் காரணம்!

இந்தியா
இந்தியாவுக்குள் ஒருநாள் போட்டிகளில் 20 சதங்களை அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார்.. இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். சச்சினை விட குறைவான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் “கோலி இன்னும் கூட நிறைய சதங்கள் அடித்து சாதனை படைக்கலாம். ஆனால் சச்சினோடு அவரை ஒப்பிட முடியாது. ஏனென்றால் சச்சின் விளையாடிய போது இன்னிங்ஸ் முழுவதும் ஒருபந்துதான் வீசப்படும். இப்போது இரண்டு பந்துகள் மாற்றப்படுகின்றன. அதுபோல சச்சின் விளையாடும் போது உள்வட்டத்துக்குள் 5 வீரர்கள் நிற்கும் விதிகள் எல்லாம் இல்லை” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கே எல் ராகுலிடம் இந்த பிரச்சனை இருக்கிறது…. முகமது அசாரூதின் அறிவுரை!