செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (21:19 IST)

1st ODI : இந்தியா அபாரம்! இலங்கை அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்கு!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
 

ஏற்கனவே நடந்த டி-20போட்டியில், இந்திய அணி 2-1 என்றற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது.

இந்த நிலையில், முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஷனகா தலைமையிலான இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
 

எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது, இதில்,  கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்களும், கில்70 ரன்களும், கோலி 113 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன் களும், பாண்ட்யா 14 ரன் களும் அடித்தனர்.

50  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373  ரன் கள் எடுத்து, இலங்கைக்கு 374 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இலங்கை அணி தரப்பில்,. ரஜிதா 3 விக்கெட்டும், மதுஷங்கா, கருணாரத்னே, ஷனகா சில்வா ஆகியோர் தலார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.