வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2023 (18:26 IST)

62 ரன்களில் விழுந்த 3 முக்கிய விக்கெட்டுக்கள்: இலங்கை அபார பந்துவீச்சு

ind vs sri21
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
இந்த நிலையில் 216 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வரும் நிலையில்  இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டன
 
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி ஆகிய மூவரும் அவுட் ஆகிவிட்ட நிலையில் தற்போது கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 
 
சற்றுமுன் வரை இந்தியா 12 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva