வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (10:15 IST)

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

Csk vs RCB
மே 18ம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி இதுவரை லீக் போட்டிகளில் இல்லாத அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.



இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ளது. நேற்றைய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றது. தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு இடம் மட்டுமே மீதமுள்ள நிலையில் அந்த ஒரு இடத்திற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நாளை பலபரீட்சை நடக்க உள்ளது.

நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் 18ம் எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த போட்டி நாளை 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று ஆர்சிபி ப்ளே ஆப் செல்ல வேண்டுமென்றால் சிஎஸ்கேவை ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அல்லது ஆர்சிபி தனது இலக்கை 18 ஓவருக்குள் அடித்து வெல்ல வேண்டும். இதுபோக ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகன் கோலியின் ஜெர்சி எண்ணும் 18தான்.


அதுமட்டுமல்ல ஆர்சிபிக்கும், 18ம் தேதிக்குமே ஒரு ராசி உள்ளது. மே 18ம் தேதியில் ஆர்சிபி எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் இதுவரை தோற்றதே இல்லை. மேலும் மே 18ம் தேதியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கோலி இதுவரை இரண்டு முறை சதமும், ஒருமுறை அரை சதமும் அடித்துள்ளார். மே 18ம் தேதி ஆர்சிபி வென்ற இரண்டு போட்டிகள் சிஎஸ்கேவுக்கு எதிரானது. இப்படியாக மே 18ஐ வைத்து பல ஆரூடங்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால் மழை உள்ளே புகுந்து ஆட்டத்தை ரத்து செய்யாத நிலையில் இந்த மே 18 ராசிபலன்கள் எந்தளவு சாத்தியம் என்பதை ரசிகர்கள் பார்க்க முடியும்.

Edit by Prasanth.K