வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (07:09 IST)

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும். சென்னை அணியின் சூப்பர் ஸ்டாரான தோனி இந்த சீசனில் எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார்.

அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்கள்தான் விளையாட முடிவதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக காயத்தால் அவதிப்பட்ட அவர் இப்போது காயத்தில் இருந்து முழுவதும் குணமாகியுள்ளார். ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் பவுலிங் செய்து அசத்தியுள்ளார். இது சி எஸ் கே அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.