1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni will play another two years says mike hussey

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

தோனி
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும்.

சென்னை அணியின் சூப்பர் ஸ்டாரான தோனி இந்த சீசனில் எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவர் ஆட்டம் சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள முன்னாள் சி எஸ் கே அணி வீரர் மைக் ஹஸ்ஸி “தோனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்திருப்பார். வெளியில் சொல்ல மாட்டார். அவர் தொடர்ந்து ஆடுவார் என்றே நம்புவோம். என் கணிப்பு என்னவென்றால் அவர் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார். ஆனாலும் அவர் முடிவு என்னவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அவர் இப்போதும் அதிரடியாக விளையாடுகிறார். நல்ல டச்சில் இருக்கிறார். ” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!