திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மே 2024 (22:21 IST)

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்தன. குஜராத் அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் அணி குஜராத்தை வீழ்த்தினால் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும் அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கனமழை காரணமாக இந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 புள்ளிகள் பெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக தேர்வு பெற சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.