வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (07:00 IST)

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 புள்ளிகள் பெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக தேர்வு பெற சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐதராபாத் அணி ப்ளே ஆஃப்க்கு சென்று விட்ட நிலையில் 18 ஆம் தேதி சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதும் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக அமைய உள்ளது. இந்த போட்டியை சி எஸ் கே அணி வெற்றி பெற்றால் நேராக ப்ளே ஆஃப்க்கு சென்றுவிடும். ஆர் சி பி அணி ப்ளே ஆஃப்க்கு செல்ல வேண்டுமென்றால் சி எஸ் கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெறவேண்டும்.