1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. op Lashkar commander Lateef Bhat, involved in Kulgam CRPF attack, killed in encounter

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக்கொலை.. அதிரடி என்கவுண்டர்...

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற தீவிர என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய கமாண்டரான லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டார். 
 
ஜங்கல்பொரா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்ற போது இந்த மோதல் வெடித்தது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய உமர் நிசார் தார் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த லத்தீப் பட் நேற்று பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.
 
ஆடியோ அழைப்பு மூலமாக பாதுகாப்பு படையினர் லத்தீப் பட்டிடம் சரணடையுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், சரணடைய மறுத்த அவர், தான் கடவுளை சந்திக்க போவதாக கூறிவிட்டு என்கவுன்டரில் உயிரிழந்தார். கடந்த நவம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் தீவிரவாதிகள் பல இடங்களில் முழுக் கண்காணிப்பு மற்றும் உளவு வேலைகளில் ஈடுபட்டது சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது. 
 
இந்த என்கவுன்டர் நடவடிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
 
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியா பொருளாதார பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. சொந்த நாட்டையே மட்டமாக பேசிய ராகுல் காந்தி..