1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. purusan movie shooting stated again

மீண்டும் வேகம் எடுக்கும் புருசன் : விஷால் - சுந்தர்.சி கூட்டணி அதிரடி அப்டேட்!

Vishal
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹிட் கூட்டணிகளில் ஒன்றான விஷால் மற்றும் சுந்தர்.சி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்  புருசன் . ஆம்பள, ஆக்ஷன், மதகதராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் 4-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 
 
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் சுந்தர்.சி தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்ததால், இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் நடிகர் விஷால் தனது மற்றுமொரு படமான 'மகுடம்' பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். தேர்தல் முடிந்து புதிய அரசும் பதவியேற்றது. இந்த நிலையில்   புருசன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இதில் விஷால், தமன்னா பங்கேற்றனர். வருகிற 2027ம் ஆண்டு பொங்களுக்கு வெளியிடும் நோக்கில் படப்பிடிப்பு முழு வீச்ச்சில் நடந்த சுந்தர்.சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டிய கருப்பு!.. சூர்யா செம ஹேப்பி!...