1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Vaccine testing in children under 12 years of age: Pfizer program

12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை: ஃபைசர் திட்டம்

12 வயது குழந்தைகள்
12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக 4,500 குழந்தைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவிலும் 6 மாதம் முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவிலும் தடுப்பு  மருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.
 
முதற்கட்டமாக 144 குழந்தைகளிடம் குறைந்த அளவு மருந்தைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய  பரிசோதனைகள் தொடங்க இருக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
92 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா