புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 மே 2021 (10:53 IST)

12 + சிறுவர்களுக்கு தடுப்பூசி சோதனை வெற்றி! – அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் முதியவர்களுக்கு மட்டும் சோதனை செய்யப்பட்ட தடுப்பூசிகள் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி சோதனையை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் 12 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட 3,700 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக மாடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தரவுகளை அமெரிக்க அரசியம் அளித்து விரைவில் ஒப்புதல் பெற உள்ளதாக கூறப்படுகிறது.