திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (08:09 IST)

இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை!

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமான சோதனை இன்று முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த சோதனை பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இன்று முதல் 2-6 மற்றும் 6-12 ஆகிய வயது குழந்தைகளுக்கான சோதனைகள் தொடங்கப்பட உள்ளன.