திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (16:45 IST)

உத்தர பிரதேசத்தில் ரஷ்ய தடுப்பூசி சோதனை !

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை அடுத்த வாரம் முதல் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது.  இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது. இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனை அடுத்த வாரம் முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடக்க உள்ளன. இந்த மருந்துகள் இன்னும் சில நாட்களில் இந்தியா வந்து சேர உள்ளன.