அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான மக்கள் வாக்களித்து மீண்டும் எங்கள் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால்தான் தற்போது உங்கள் முன்னர்...