புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (19:21 IST)

காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்த காதலி.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்

அர்ஜெண்டினாவில் தனது காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்த காதலிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரெண்டா பெரட்டினி என்ற பெண், 42 வயதான ஃபெர்னாண்டஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஃபெர்னாண்டஸ், தான் பெரட்டினியுடன் உறவு வைத்து கொண்டதை ரகசியமாக வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெரட்டானி அதிர்ச்சியடைந்தார். மேலும் தன்னை ஏமாற்றிய ஃபெர்ணாண்டஸை பழிவாங்கவும் முடிவெடுத்தார். இதனையடுத்து ஒரு நாள் ஃபெர்னாண்டஸை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ஃபெர்னாண்டஸை பெரட்டினி உறவுக்கு அழைத்துள்ளார்.

அதற்கு இணங்கிய ஃபெர்னாண்டஸ் தனது ஆடைகளை களைத்துள்ளார். பழிவாங்க தயாராக இருந்த பெரட்டினி அவர் மறைத்து வைத்திருந்த கட்டிங் பிளேடை வைத்து ஃபெர்னாண்டஸின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஃபெர்னாண்டஸ் 8 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பெரட்டினி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் அவருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது. தன்னை ஏமாற்றிய காதலனின் மர்ம உறுப்பை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.