செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (16:11 IST)

வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனாரா நித்தி??

ஜலகண்டேசுவரர் ஆலயத்தின்  லிங்கம் தன்னுடன் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய நித்யானந்தா, வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீடர்களுடனும் பக்தர்களுடனும் எப்பொழுதும் பிசியாக இருக்கும், நித்தியானந்தா கடந்த சில மாதங்களாக பக்தர்களை சந்திக்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனிடைய சமீபத்தில் யூட்யூப் சேனல் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வந்த நித்தியானந்தா, ஜலகண்டேசுவரர் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் தான் இருக்கிறது என கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதை தொடர்ந்து சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் நித்தியாந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரி வந்த நிலையில், தற்போது நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நித்தியாந்தா தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.