மோடி இந்தியாவை காப்பாற்றி விட்டார்! ஆனால் தமிழகத்தை?? – ரஜினியின் சம்மந்தி சர்ச்சை பேச்சு
பிரபல இயக்குனர் ஒருவர் ”இந்தியா காப்பாற்றப்பட்டது.. அதேபோல தமிழகமும் காப்பாற்றபட வேண்டும்” என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘என் ராசாவின் மனசிலே’, ‘துள்ளுவதோ இளமை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “பிரதமர் மோடிக்கு உலகெங்கிலும் செல்வாக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றவர்களை காண குவிவது போல மோடியை பார்க்க மக்கள் கூட்டம் குவிகிறது. எந்த விவகாரத்திலும் இந்தியாவை அசைத்து பார்க்க முடியாது என்பதை உலகிறகு நிரூபித்தவர் மோடி.
சுதந்திரம் கிடைத்தும் இத்தனை ஆண்டுகளாக சுரண்டப்பட்டு வந்த இந்தியாவை மோடி காப்பாற்றியிருக்கிறார். அதேபோல் தமிழ்நாடும் காப்பாற்றப்பட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
இதன்மூலம் அவர் திராவிட கட்சிகள் தமிழகத்தை சுரண்டுவதாக மறைமுகமாக பேசுகிறாரோ என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும் அவர் மறைமுகமாக தனது சம்பந்தி ரஜினிகாந்த்க்கு ஆதரவு தெரிவிக்கும் தோனியில் தமிழக அரசியல் கட்சிகளை டேமேஜ் செய்து பேசுவதாகவும் செய்திகள் கசிகின்றன.