இந்தோனீசியா சுனாமியை உருவாக்கிய எரிமலை துண்டுகள் இவைதான்...
ஒரு வருடத்திற்கு முன்பு இந்தோனீசியாவில் சுனாமியை உருவாக்கிய எரிமலையின் எச்சங்கள் முதன்முறையாக கடற்பரப்பில் படம் எடுக்கப்பட்டுள்ளன.
அனாக் க்ரகாடாவ் என்று அழைக்கப்படும் அந்த மலையின் ஒரு பக்கம் சரிந்து பெருங்கடலுக்குள் விழுந்ததை விஞ்ஞானிகள் சோனார் உபகரணங்கள் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் சில துண்டுகள் 70-90 மீட்டர் உயரத்துக்கு உள்ளன.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அது கடலில் வீழ்ந்த போது சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரை பகுதிகளில் பேரலையை உருவாக்கியது. இரவு நேரத்தில் நடைபெற்ற அந்த பேரழிவால் ஜாவா மற்றும் சுமத்ராவுக்கு நடுவில் உள்ள சுண்டா ஜலசந்தியில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த சமயத்திலிருந்து என்ன நடைபெற்றது என ஆராய ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பெற்ற படிப்பினைகள் எல்லாம் கடலுக்கு மேலே தென்படும் பாறையை கொண்டுதான் அமைந்துள்ளது.