திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (20:08 IST)

டிராகன்களுக்கு தனி தீவு: எங்கு தெரியுமா?

ரம்பத்தை போன்ற கூர்மையான பற்களை உடைய விஷத்தன்மை மிக்க கொமோடா டிராகன்களை காக்கும் முயற்சியில் இந்தோனீசிய ஆளுநர் இறங்கி உள்ளார்.
 
அதாவது, இப்போது கொமொடா டிராகன் வசிக்கும் தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவதால் அந்தத் தீவின் சூழலியல் கெடுகிறது, அதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா தீவை அந்த டிராகன்களிடமே விட்டுவிடத் திட்டமிட்டுள்ளனர். அதாவது, சுற்றுலாப் பயணிகளை வருகைக்கு ஓரளவேனும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
 
அந்தப் பகுதியின் ஆளுநர் பங்டிலு லைஸ்கொடாட், "அங்கு மனித உரிமைகளுக்கு வேலை இல்லை. விலங்கு உரிமை மட்டும்தான்" என்கிறார். ஆளுநரின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தோனீஷியா சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.