தொடர்புடைய செய்திகள்
- இதை மட்டும் செய்தால் கொரோனவை ஒழித்துவிடலாம் - டிப்ஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
- கொரேனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம். - விராட் கோலி !!
- லொக்கு லொக்குனு இரும்பியே பீதிய கிளப்புரானுங்க... அழகிரி அப்செட்!!
- கொரோனா வைரஸ் - இந்தியாவில் இரண்டாவது மரணம்!
- கொரோனா பயம் இருக்க நேரத்துல இது தேவைதானா? – திமுக எம்.பி கண்டனம்
கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களின் மருத்துவ செலவுகள் குறித்து மாநில அரசே நிர்ணயிக்கும் என்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.