1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus case Second death confirmed in India

கொரோனா வைரஸ் - இந்தியாவில் இரண்டாவது மரணம்!

கொரோனா
கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். 
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரண்மடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கடத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்! காதலுடன் சேர்வாரா?