ஜெயில்ல டார்ச்சர் பண்ணாங்க!.. பயந்துதான் தப்பிச்சோம் - கைதி வெளியிட்ட வீடியோ
தேனி மாவட்ட சிறையிலிருந்து சமீபத்தில் 17 கைதிகள் தப்பிச் சென்றனர். சிறைக்காவலரை தாக்கிவிட்டு அவரின் நகையை பறித்துக் கொண்டு கைதிகள் தப்பியதாக காவல்துறை கூறியது. அதன்பின் 17 கைதிகளையும் படிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 15 கைதிகளை போலீசார் பிடித்துவிட இரண்டு கைகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் தப்பிய கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் கொடுபடுவதற்கு முன்னாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் நாங்கள் 21 பேர் சிறையிலிருந்து தப்பினோம். சிறையில் எங்களை டார்ச்சர் செய்கிறார்கள்.. அங்கு உணவு உள்ளிட்ட வசதிகள் சரியில்லை.. இதை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. அதனால்தான் நீதிபதியிடம் தெரிவிக்கலாம் என்று தப்பி வந்தோம்.. மற்றபடி போலீஸுக்கு, பொது மக்களுக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
எல்லாம் பேசி முடிவெடுத்துதான் வெளியே வந்தோம்.. ஆனால் வேறு மாதிரி ஆகிவிட்டது.. இப்போது எங்களை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என செய்திகள் வருகிறது.. எனக்கு சமீபத்தில்தான் திருமணமாகி என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.. எனக்கு உதவுவதற்கு நீதிபதி முன் வந்தால் அவர்கள் முன் நாம் எல்லாவற்றையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என்று அவர் பேசி இருக்கிறார்..
பொதுவாகவே சிறை கைதிகள் உள்ளே எப்படி நடத்தப்படுகிறார்கள் என்கிற செய்தி வெளியே வராது. சிறை அதிகாரிகள் அதை வெளியே கூற மாட்டார்கள். சிறைக் கைதிகளை வெளியே அதை சொன்னால் மட்டுமே தெரிய வரும்.. ஆனால் சிறை கைதிகளையும் வெளியே சொல்ல காவல்துறையினர் விட மாட்டார்கள். தற்போது மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோவால் இது தெரியவந்திருக்கிறது.