சென்னை To தென்காசி - தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொதுவாகவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்தமுறை தீபாவளி வருகிற 8ம் தேதி வருகிறது.
இதையடுத்து ஏற்கனவே மதுரை உள்ளிட்ட சில ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது சென்னையிலிருந்து தென்காசி, கன்னியாகுமாரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 5ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமாரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், நவம்பர் 7ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், நவம்பர் 9ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 11.20-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், நவம்பர் 9ம் தேதி செங்கோட்டையிலிருந்து தம்பரத்துக்கு மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
விடுமுறை முடிந்து 9ம் தேதி சென்னை திரும்புவர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.