1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified சனி, 21 ஜனவரி 2023 (23:00 IST)

ஆஃப்கானில் கடும் பனிப்பொழிவு -78 பேர் உயிரிழப்பு

Afghan
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவப் படைகள் வாபஸ்  பெற்றதால்  தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.

ஆப்பாகிஸ்தானில் தாலிபன் ஆட்சியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களும் கல்விக் கற்கவும், பொதுவெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள  மக்கள் 2 கோடிக்கும் அதிகமானோர் உணவு கிடைக்காமலும், வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப  நாடான ஆப்கனில் தற்போது மைனஸ்  28 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.  இந்த உறைபனியால் கடந்த 9 நாட்களில் சுமார் 78 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.