1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (08:57 IST)

அர்ஜென்டினாவை உலுக்கிய நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் அளவு பதிவு!

அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.5 புள்ளிகளாக பதிவு.


தேசிய நில அதிர்வு மையத்தின்படி, வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை 3:39 மணியளவில் அர்ஜென்டினாவின் கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிமீ தொலைவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிலநடுக்கம்: 6.5, 21-01-2023 அன்று ஏற்பட்டது, 03:39:37 IST, லேட்: -26.82 & நீளம்: -63.36, ஆழம்: 586 கிமீ, இருப்பிடம்: கார்டோபாவின் 517 கிமீ N" என்று NCS ட்வீட் செய்துள்ளது. இந்த நிலநடுக்கமானது அர்ஜென்டினாவின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோ மாகாணத்தில் உள்ள மான்டே கியூமாடோவில் இருந்து 600 கிலோமீட்டர் (372.82 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பராகுவே மற்றும் அர்ஜென்டினாவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு பலி அல்லது பலத்த சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.