1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 ஜனவரி 2023 (21:05 IST)

'பெண் பொம்மைகளுக்கு கட்டுப்பாடு' - தலிபான்கள் புதிய உத்தரவு

Taliban
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண் பொம்மைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருவதால் அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெண்கள் படிப்பதற்கு தடை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு பழமைவாதக் கொள்கையைப் புகுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

 
இந்த நிலையில், துணிக்கடைகளில் தலையில்லாமல் பொம்மைகள் இருக்க வேண்டும்; தலையிருந்தல்,  பெண் பொம்மைகளின் முகத்தை மறைத்துத்தான் காட்சிக்கு வைக்க வேண்டுமென்று தலிபான்கள் புதிய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பெண் பொம்மை வைப்பது தங்கள் வழக்கத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.