திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (18:30 IST)

உங்களிடம் அது இருந்தால் எங்களிடம் இது உள்ளது; ரோகித் சர்மா

உலகின் தலைசிறந்த பவுலர்களை கொண்ட தென் ஆப்பரிக்க அணியின் பவுலிங்கை சமாளிக்க இந்திய அணியிடம் சிறப்பான பேட்டிங் உள்ளது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் வீரர் ரோகித் சர்மா கூறியதாவது:-
 
தற்போது சர்வதேச அளவில் மற்ற அணிகளைவிட தென் ஆப்ரிக்க அணியின் பந்து வீச்சாளர்களே சிறந்தவர்கள். மார்னே மார்கல், ரபாடா வேகத்தில் மிரட்டுவார்கள். ஸ்டைன் பழைய மற்றும் புது பந்துகளை கையாளுவதில் கில்லாடி. 
 
பிளாண்டர் உள்ளூர் போட்டிகளில் ரொம்ப டேஞ்சர். தென் ஆப்ரிக்க அணி பவுலிங்கில் சிறந்தது என்றால் அதை சமாளிக்க இந்திய அணி பேட்டிங்கில் சிறந்தது என்று கூறியுள்ளார்.