1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Australia completed day four with 333 run lead

கடைசி விக்கெட்டில் நங்கூரம் பாய்ச்சிய ஆஸி… நான்காம் நாள் ஆட்டமுடிவில் 333 ரன்கள் முன்னிலை!

கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தின் மூலம் 474 ரன்கள் சேர்த்தது.  பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.  முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸி 228 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 4 விக்கெட்களும் சிராஜ் மூன்று விக்கெட்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது ஆஸி அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி விக்கெட்டுக்கு ஸ்காட் போலண்ட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் 55 ரன்கள் சேர்த்து அணியைக் காப்பாற்றினர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டக்காரன்… லபுஷானிடம் சொன்ன பும்ரா!