சதமடித்து அசத்திய நிதீஷ்குமாருக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் பரிசு அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துக் கலக்கியுள்ள நிதீஷ்குமார். 21 வயதான இந்த வீரர் தற்போது ஒரே நாளில் உலகக் கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த போட்டியில் முன்வரிசை ஆட்டக் காரர்கள் சொதப்பிய நிலையில் வாஷிங்டன் சுந்தரோடு கூட்டணி அமைத்து சிறப்பான இன்னிங்ஸை ஆடி அணியை பாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார்.
கடைசி கட்டத்தில் 9 விக்கெட்கள் விழுந்த நிலையில் ஒரு சுவாரஸ்யமான க்ளைமேக்ஸ் போல கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து சதமடித்தார். அவர் சதமடித்த போது அவரின் குடும்பத்தினர் அதைப் பார்த்து உணர்ச்சிவசப் பட்டது இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் நிதீஷ்குமாரின் இன்னிங்ஸை பாராட்டும் விதமாக ஆந்திரக் கிரிக்கெட் வாரியம் 25 லட்ச ரூபாய் பரிசு அளித்துள்ளது.