ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (13:30 IST)

இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டக்காரன்… லபுஷானிடம் சொன்ன பும்ரா!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட்டில் அவர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

இந்த போட்டியில் அவர் இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார். ஆனால் அதிர்ஷடம் அவருக்கு துணை போகவில்லை. அவர் வீசிய பந்தை எதிர்கொண்ட லபுஷான் தடுப்பாட்டம் ஆட, பேட்டில் பட்ட பந்து அவர் கால்களுக்கு இடையில் புகுந்து ஸ்டம்பில் படுவது போல சென்று சில செமீ தூரத்தில் விழுந்தது. அப்போது லபுஷான் அருகில் வந்த பும்ரா “நான் பார்த்ததிலேயே இந்த உலகத்தில் நீதான் அதிர்ஷ்டக்காரன்’ என சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு லபுஷான் சிராஜ் பந்தில் எல் பி டபுள் யூ முறையில் அவ்ட் ஆகி வெளியேறினார்.