தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி
- கிங்பிஷர் போல் ஏர் இந்தியா மாறாது; விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நம்பிக்கை
- எங்களது இணக்கத்தை சீர்குலைப்பது இந்தியாதான்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு!!
- பிட்காயின் மோகம்? என்ன சொல்கிறது நிதி அமைச்சகம்??
- இந்தியாவில் முதல்முறையாக ரோபோ போலீஸ்: லஞ்சம் ஒழிய வாய்ப்பு
இதெல்லாம் மைதானமா? கொந்தளிந்த கோலி
தென் ஆப்பரிக்காவிற்கு எதிராக பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ள மைதானம் சரியில்லை என்றும் இதில் விளையாடி என்ன பயன் என்றும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தொடர் தொடங்குவதற்கு முன் இரு அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பயிற்சி ஆட்டம் என்பது நாம் கொஞ்சமாவது பயிற்சி எடுத்துக்கொள்வதற்காகவும், திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் விளையாடுவது. ஆனால் உண்மையான போட்டி நடைப்பெறக் கூடிய மைதானத்தின் பிட்சை ஒப்பிடும் போது அதில் 15% கூட இல்லாத மைதானத்தில் விளையாடுவதால் என்ன பயன். இதில் எப்படி நாம் பயிற்சி எடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
