ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (17:29 IST)

கிங்பிஷர் போல் ஏர் இந்தியா மாறாது; விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நம்பிக்கை

கிங்பிஷர் நிறுவனம் போல் செயல்படாத நிறுவனமாக ஏர் இந்தியா மாறாது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் காபதி ராஜூ தெரிவித்துள்ளார்.

 
கிங்பிஷர் நிறுவனம் போல் ஏர் இந்தியா நிறுவனத்தை செயல்படாத நிறுவனமாக மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. நாட்டின் போக்குவரத்து சேவைக்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இது கிங்பிஷர் பாதைக்கு செல்லாது. தொடர்ந்து செயல்படும். ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது என்று கூறியுள்ளார்.
 
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் கிங்பிஷர் நிறுவனத்தும் ஏற்பட்டது. கடன் பிரச்சனையால் கிங்பிஷர் நிறுவனம் 2012ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் போனது குறிப்பிடத்தக்கது.