ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (21:45 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..!

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி திரில்லான வெற்றி பெற்றுள்ளது. 
 
டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 237 ரன்களும் எடுத்தது.
 
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்த நிலையிலும், இறுதியில் 39.8 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்கம் 89 மற்றும் 37 ரன்கள் எடுத்ததற்காக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.   இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva