திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (16:59 IST)

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. 
 
இந்நிலையில் நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.