புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (17:20 IST)

ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கையை குழிதோண்டி புதைக்கும் பிசிசிஐ?

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி, இந்திய பி அணியின் டெஸ்ட் போட்டி, துலீப் டிராபில் இந்திய ப்ளூ, ரெட், கிரீன் அணிகள் மோதும் போட்டி ஆகியவற்றுக்கான அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. 
 
ஆனால், இதில் எந்த பட்டியலிலும், அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. ஹைதராபாத்தை சேர்ந்த ராயுடு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினார். தற்போது யோ யோ டெஸ்டில் அவர் தோல்வி உற்றதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 
 
யோ யோ டெஸ்ட்டை மட்டும் வைத்து ஒருவீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது என பலர் கூறிவரும் நிலையில், ராயுடுவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இது ஒன்றால் சிதைக்கப்படுகிறது. 
 
கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராயுடு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.  யோ யோ டெஸ்டில் முதலில் அவர் தோல்வி அடைந்த போது பிசிசிஐ அவருக்கு 6 வார கால அவகாசம் வழங்கியது. ஆனால், ராயுடு கூடுதல் அவகாசம் கேட்டார் என்பதற்காக அவகாசம் வழங்காமல், அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்தது. 
 
ஆனால், ரோகித் சர்மாவுக்கு இருமுறை அழைப்பு விடுத்தும், அவர் சொந்த வேலை காரணமாக, அவகாசம் கேட்டு சென்றுவிட்டார். 3 வது முறை அவருக்கு சாதகமான நேரத்தில் வந்து யோ யோ டெஸ்டில் பங்கேற்றார். இதனால், பிசிசிஐ ராயுடுவுக்கு வாய்ப்புகளை திட்டமிட்டு கெடுப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.