சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
பெரும்பாலான அணிகள் தங்கள் அணியில் முன்பு இடம்பெற்றிருந்த வீரர்களைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினர். ஆனால் பெங்களூர் அணி தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் நியாயமான விலைக்குக் கிடைத்தபோதும் அவர்களைக் கைப்பற்ற ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக அந்த அணியில் 8 ஆண்டுகளாக விளையாடிய முகமது சிராஜை அவர்கள் கைப்பற்ற ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து பேசியுள்ள அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேசும் போது “ எங்கள் அணியில் அவர் இருந்தது பெருமையான விஷயம். ஏலம் இரண்டு நாட்களாக நடந்ததால், நாங்கள் எடுக்கவேண்டிய வேறு சில வீரர்களை எடுக்க வேண்டிய சூழல் இருந்ததது. சிராஜ் அதிக விலைக்கு BID செய்யப்பட்டார். அதனால் அவரை எடுக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.