1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir flew to india for personal reasons

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

கம்பீர்
பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த  டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தினார் ஜெய்ஸ்வால். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் இந்திய அணிக்கு மிக முக்கியமானத் திருப்புமுனையாக அமைந்தது.

கம்பீரின் பயிற்சியின் கீழ் அடுத்தடுத்து இரண்டு தொடர்களை இழந்த நிலையில் பெர்த் டெஸ்ட் வெற்றி அவருக்கு சிறு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். இந்த வெற்றியை இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய கட்டாயமும் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு நடுவே கம்பீர் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அடிலெய்டில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவிடுவார் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!