1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (20:47 IST)

போராடி 256 ரன்கள் குவித்த இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
ஆரம்பத்திலே தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாற தொடங்கியது. ரோகித்தை தொடர்ந்து தவான், தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கேப்டன் கோஹ்லி அரைசதம் விளாசினார்.
 
கேப்டன் கோஹ்லியும் களத்தை விட்டு வெளியேற விக்கெட்டு சரியாமல் அணியை தோனி மட்டும் தனியாக நின்று மீட்டெடுத்தார். தோனியும் அவுட்டாகி வெளியேற கடைசியில் சர்துல் தாகூர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்கு தேவையாக ஸ்கோரை பெற்றுக்கொடுத்தனர்.
 
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.