திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (13:21 IST)

ஹாக்கிப் போட்டி - நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி

பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து ஆண்கள் அணிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்தை தோற்கடித்தனர்.
இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆட்டம் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
 
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இருந்தே சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
 
இதன்மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை தங்கள் வசமாக்கிக் கொண்டது.