1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (16:41 IST)

தோனிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த போவது யார்?

இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், தோனியின் வழிநடத்தல் இன்று தொடருகிறது.

 
தோனி தொடர்ந்து தோல்விகளை சந்திக்க இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தோனியை கேப்டன் பதவியில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.
 
அதன்பின் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற தொடங்கியது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின் தோனியின் பங்கு தற்போதும் இருக்கிறது. என்னதான் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், தோனிதான் அணியை வழிநடத்தி வருகிறார்.
 
இக்கட்டனாக நெருக்கடியான நேரங்களில் தோனி கேப்டனாக இல்லை என்றாலும் அந்த பொறுப்பை அவர் தானாக எட்டுத்துக்கொண்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து வருகிறார்.
 
டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லிக்கு பக்கபலமாக நிற்பவர் துணை கேப்டன் ரஹானே. கோஹ்லி இல்லை என்றாலும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் தகுதி உடையவர் ரஹானே.
 
கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இன்னும் சிறந்த கேப்டனாக உருவெடுக்கவில்லை. தோனி ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய பின்தான் தெரியவரும் கோஹ்லியின் கேப்டன்சி. 
 
தோனி ஓய்வு பெற்ற பின் இந்திய அணிக்கு ரஹானே போன்ற அனுபவமுள்ள வீரர்கள் தேவை. ரோகித் சர்மா குறைந்த ஓவர் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
இந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளுக்கு மூன்று விதமான கேப்டன்களை நியமிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய டெஸ்ட் அணிக்கு தனி கேப்டன், ஒருநாள் அணிக்கு தனி கேப்டன், டி20 அணிக்கு தனி கேப்டன் என்று நியமிக்க அதிகளவில் வாய்புள்ளது.