ரோகித் இல்லாமல் இந்திய அணியா? கொந்தளிக்கும் ரசிகர்கள்

<a class=Rohit Sharma test" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-07/19/full/1531990927-9705.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: வியாழன், 19 ஜூலை 2018 (14:32 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இடம்பெறாததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.

 
இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற உள்ள டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் இடம்பெறவில்லை.
 
ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 
 
இதனால் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
 
கண்டிப்பாக இந்திய அணி ரோகித்தை மிஸ் செய்யும். ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணியா? இந்திய அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மாவின் பங்கு பெரும் அளவும் இருந்துள்ளது. இந்திய அணியின் தேர்வு முட்டாளதனமாக உள்ளது.
 
இதுபோன்று ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :