புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (08:49 IST)

டிராவிட்டை அலட்சியப்படுத்திய பும்ரா - கங்குலி ரியாக்சன் !

தனது உடற்தகுதி தேவைகளுக்காக கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள என் சி ஏவை அணுகாத பும்ரா மீது டிராவிட் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பூம்ரா தனது உடல் தகுதியை நிரூபிக்க, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை அணுகினார். ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடல் பகுதிகளை நிரூபிக்க பெங்களூரில் அமைந்துள்ள எம்சிஏ மூலமாகத்தான் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அமைப்பிற்கு இப்போது தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு சோதனைகளை செய்ய பூம்ரா முன்வராததால் பும்ராவுக்கு உடற்தகுதி தேர்வு நடத்த டிராவிட் மறுத்துள்ளார். இதுசம்பந்தமாக பிசிசிஐ சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்தள்ளார். அதில் ‘இந்திய வீரர்கள் அனைவரும் என் சி ஏ  மூலமாகவே உடற்தகுதி சான்றிதழ் பெற்று இந்திய அணியில் விளையாட முடியும்’ என டிராவிட்டுக்கு ஆதரவாகக் கூறியுள்ளார்.