இன்னும் வலிமையாக மீண்டு வருவேன் – பூம்ரா நம்பிக்கை !

Last Modified வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:32 IST)
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ள பூம்ரா இன்னும் வலிமையாக மீண்டுவருவேன் என ட்வீட் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் இருந்து பூம்ரா காயம் காரணமாக விலகியுள்ளதை அடுத்து இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பூம்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்திய வீரர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டபோது ம்ராவிற்கு முதுகில் லேசான பிராக்சர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டிவிட்டரில் ‘ நான் மீண்டுவர வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். விளையாட்டில் காயம் என்பது இயல்பு. நான் மீண்டும் வலுவாக எழுச்சி அடைந்து வருவேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :