வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:28 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்: பும்ரா திடீர் விலகல்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் முடிந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரில் தொடர் சமனில் முடிந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
 
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன் வீரர்களின் உடல் தகுதி பரிசோதனை இன்று செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் பும்ராவுக்கு முதுகுப்பகுதியில் லேசான எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதால் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
 
விக்கெட் எடுக்கும் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவரான பும்ரா இந்த தொடரில் விளையாட முடியாத நிலையால் அவரது ரசிகர்கள் கடும் அதிரச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஏற்பட்ட பும்ராவுக்கு காயம் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா கூறியபோது ’இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து பும்ரா ஓய்வு எடு வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அவரைப் போன்ற திறமைசாலியை நாம் வீணாக்கக்கூடாது. அவர் தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக இருப்பதற்குக் காரணம் இருக்கின்றது. இந்த நிலையில் அவருக்கு அதிக சுமை கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார் 
 
 
இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. உமேஷ் யாதவ் கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.