வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (21:08 IST)

டபுள் சென்சுரி அடித்த பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்

பெங்களூரில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிடன் மகன் சம்ரிட் டிராவிட் டபுள் செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார்.
 
பெங்களூரில் வைஸ் பிரசிடெண்ட் 11’ என்ற அணிக்காக விளையாடி வரும் 14 வயது சம்ரிட் டிராவிட், தர்வாத் ஜோன் என்ற அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் மிக அருமையாக பேட்டிங் செய்து 250 பந்துகளில் 201 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சம்ரிட் அசத்தியுள்ளார். 26 ரன்கள் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுக்களை அவர் கைப்பற்றியுள்ளார். இருப்பினும் இந்த போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.