காயத்தால் பூம்ரா பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது – நெஹ்ரா நம்பிக்கை !

Last Modified செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:13 IST)
காயத்தால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா விரைவில் திரும்புவார் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பூம்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் சரியாக குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூம்ரா குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் நெஹ்ரா ‘அவருக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பந்துவீச்சு முறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர் மீண்டும் வலுவாக வருவார். அவரது பந்துகளில் வேகம் அப்படியே இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். அவரது காயம் எத்தகையது, எத்தனை நாளில் குணமாகும் என தெரியவில்லை. அடுத்த 2 மாதங்களில் அவர் குணமடைவார் என எதிர்பார்க் கிறேன். அவருக்கு இப்போதுதான் 25 வயதாகிறது. அவருடைய உடல்நிலையை அவர் நன்கு அறிவார்’ எனத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :