செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (15:28 IST)

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து

sindhu
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் பிவி சிந்து இடம் பெற்று உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பிவி சிந்து சீனாவின் சாங் ஒய் மன் உடன் மோதினார் 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் பிவி சிந்து மிக அபாரமாக விளையாடி 21 - 12,  21 - 10 என்றால் நேர் செட்களில் வீராங்கனையை தோற்கடித்தார்.
 
 இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது