செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (17:18 IST)

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்‌சயா சென் தோல்வி

batmintonn
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்‌சயா சென் தோல்வி
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய இளம் வீரர்  லக்‌சயா சென் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் 
 
இந்த நிலையில் இன்று நடந்த காலிறுதிப் போட்டியில்  லக்‌சயா சென் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து அவர் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். 
 
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போட்டியில் 16-21, 21-12, 14-21 என்ற செட் கணக்கில் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது