செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 மே 2022 (16:22 IST)

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்

batminton
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளது
 
 கடந்த சில நாட்களாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது என்பதும் அதில் இந்திய அணி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்த நிலையில் இந்திய ஆடவர் அணி அபாரமாக விளையாடி இறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது
 
14 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தோனேஷியா அணியை, இந்திய அணி இறுதிப் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது